வேட்டுவ அரசர்கள்ளின் வரலாறு மத்திய பல்கலைக்கழகதில் பதிவு செய்யப்பட்டது.
- Posted on Mon Apr 22, 2024
- 2367 Views
15/4/24 வேட்டுவ அரசர்கள்ளின் வரலாறு மத்திய பல்கலைக்கழகதில் பதிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் நடத்திய செப்பேடுகள் உணர்த்தும் தமிழக வரலாறும் பண்பாடும் என்ற பன்னாட்டு கருத்தரங்கில் செப்பேட்டில் சைவ சமய வளர்ச்சியில் கொங்கு வேட்டுவ அரசர்கள்ளின் பங்களிப்பு என்ற ஆய்வுக் கட்டுரையை Dr.Valaiparameswaran.MD அவர்கள் வாசித்தார் மேலும் இந்த கட்டுரை செப்பேடுகள் உணர்தும் தமிழக வரலாறும் பண்பாடும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது இந்த புத்தகத்தில் ஏழாவது கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது இந்த கட்டுரையில் முப்பத்தி இரண்டு வரலாற்று ஆவணங்கள் (கல்வெட்டு செப்பேடு ஓலைச்சுவடிகள் மற்றும் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் )அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது
இதில் 10க்கும் மேற்பட்ட கொங்கு நாட்டில் ஆட்சி செய்த வேட்டுவ அரசர்கள் சைவ சமயத்தின் வளச்சிக்கு பெரும் பங்கற்றியுள்ளதை ஆதாரங்கள்ளுடன்பதிவு செய்யபட்டுள்ளது
இந்த பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரையை வாசித்து கொங்கு நாடு வேட்டுவ அரசர்களின் புகழை முதல்முதலாக உலக அளவில் பன்னாட்டுக் கருத்தரங்கில் பதிவு செய்து பெருமை சேர்த்தது வேட்டுவர்களின் மணி மகுடத்தில் இன்னும் ஒரு வைரம் பதித்தாதகும்
செப்பேடுகள் உணர்த்தும் தமிழக வரலாறும் பண்பாடும் என்ற இந்த நூல் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் மூலம் அனைத்து நூலகங்களுக்கும் அனுப்பப்பட்டு வருங்காலத்தில் செப்பேடுகள் ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் 83 க்கும் மேற்பட்ட செப்பேடுகளைஆய்வு செய்த முதல் நூல் என்பது இந்த நூலுக்குப் பெருமை ஆகும் கல்வெட்டு ஓலைச்சுவடி போன்ற ஆய்வு நூல்கள் எண்ணற்ற இருந்தாலும் முதன்முதலில் செப்பேடுகள் பற்றி வெளியிடப்பட்ட இந்த முதல் நூலில் வேட்டுவ அரசர்களின் சைவசமய வளர்ச்சிப்பணியை பதிவிட்டது இந்த நூலுக்கும் வேட்டுவர்கும்பெருமையாகும்.இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றவர்கள்1) கவிதா வாழை பரமேஸ்வரன் மற்றும் 2)வெற்றி விகாஸ்.
காலை கதிர் செய்தி தொகுப்பு
திங்கள், ஏப்ரல் 22, 2024
திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் இந்தியாவிலே முதன் முதலாக செப்புப் பட்டயங்கள் பற்றிய நூல் தொகுப்பு
நமது நிருபர் ஏப்ரல் 21, 2024
திருவாரூர், ஏப்.21- திருவாரூர் தமிழ்நாடு மத்தி யப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை, கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மைப் பட்டயப் படிப்புத் துறை சார்பாக, “செப்பேடு கள் உணர்த்தும் தமிழக வரலாறும் பண்பாடும்” நூல் வெளியீட்டு விழா மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னை செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி தமிழ்த் துறையுடன் இணைந்து நடைபெற்றது.
தமிழக வரலாறும் பண்பாடும் என்ற தலைப்பில் ஒருநாள் பன் னாட்டுக் கருத்தரங்கம் ஏப்ரல் 15 அன்று சென்னை செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி யில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு மத் திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மு.கிருஷ்ணன் தலைமை வகித்து உரையாற்றினார். சிடிடிஇ கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழ கத்தின் சமுதாயக் கல்லூரி, கல் வெட்டியல் மற்றும் மரபு மேலா ண்மை பட்டயப் படிப்புத் துறை பொறுப்பாசிரியர் ச.இரவி நோக்க உரையாற்றினார்.
இதில் அறிஞர்கள், ஆய்வாளர் கள், வரலாற்று ஆர்வலர்கள் எழு திய ஆய்வு நூல் தொகுப்பைத் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழ கத் துணைவேந்தர் மு.கிருஷ்ணன் வெளியிட, சிடிடிஇ கல்வி அறக்கட் டளை தாளாளர் இல.பழமலை பெற்றுக் கொண்டார்.
இந்நூலின் பதிப்பு ஆசிரிய ரும், தமிழ்நாடு மத்தியப் பல்க லைக் கழகம் கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை பொறுப்பாசிரிய ருமான ச.இரவி பேசுகையில், “இந் தியாவிலேயே முதன் முதலாகச் செப்புப் பட்டயங்கள் பற்றி அறி ஞர்கள் எழுதிய, நூல் தொகுப்பு வெளி வருவது இதுவே முதல் முறை. இந்த நூலில் 83 அறிஞர் களின் கட்டுரைகள், 718 பக்கங்க ளில் வெளி வந்திருக்கின்றன.
தொடக்கக் காலப் பல்லவர், பாண்டியர்கள், இடைக்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டி யர்கள், விஜயநகர, நாயக்கர்கள், பாளையக்காரர்கள், மராட்டி யர்கள், ஜமீன்தார்கள், தொண்டை மான்கள், சேதுபதிகள் பற்றிய கட்டு ரைகள் இடம் பெற்றுள்ளன.
தமிழ் எழுத்து வரலாற்றை ஆராய வேண்டுமெனில் செப்புப் பட்டயங்களில் எழுதப்பட்ட பாலி, பிராக்கிருதம், சமஸ்கிருதம், தமிழ், மராத்தி, தெலுங்கு, கன்ன டம் போன்ற மொழி எழுத்துக்களை யும் ஆராய வேண்டும். மேலும், மறைந்துபோன தமிழக வர லாற்றை மீட்டுருவாக்கம் செய்து உண்மையான வரலாற்றை எழுத இந்த நூலின் தொகுப்பு முக்கியப் பங்கு அளிக்கும்” என்று தெரிவித் தார்.
தலைமை உரையாற்றிய மத்தி யப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் மு.கிருஷ்ணன், “முறை யான தலைமுறை தமிழக வர லாற்றை எழுதுவதற்கு ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள் போல் செப்புப் பட்டயங்களும் மூல ஆதார ஆவணங்களாக விளங்குகின்றன. ஓலைச் சுவடிகள் வழக்கில் இருந்த காலத்தில், செப்புப் பட்டயங்கள் தோன்றிய காரணத்தை அறிஞர்கள் ஆராய வேண்டும். அறிவியல் முறைப்படி செப்புப் பட்டயங்கள் கூறும் கருத்துகளை ஆராய்ந்து, இதுவரை கூறப்படாத தமிழக வர லாற்றையும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் வெளியிடுவதற்கு இந்த நூல் மிகவும் ஆதாரமாக இருக்கிறது. செப்பேடுகள் கூறும் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் பொறுப்பு ஆய்வாளர் களிடம் உள்ளது” என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஐந்து அமர்வு களில் 100 கட்டுரைகள் வாசிக்கப் பட்டன. இக்கருத்தரங்கில் பங் கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் கள் வழங்கப்பட்டன. தமிழ்த் துறைத் தலைவர், பேராசிரியர்கள், தொல்லியல், கல்வெட்டியல் அறி ஞர்கள் பங்கேற்றனர்.